Wednesday, 16 November 2016

ஞாயிறு விடுமுறையும் இல்லை.

ஞாயிறு விடுமுறையும் நம்மிடம் பறிபோகும் நாள்வெகு தொலைவில் இல்லை.

ஒரு மனிதனுக்கு 8 மணிநேர பணி, ஒய்வு, உறக்கம்.  ஊழியர்கள் ஆறு நாட்கள் வேலை பார்த்தல் ஒருநாள் விடுமுறை என்பது தொழிலாளர் சட்டங்கள் வழங்கிய வாய்ப்பு. ஆனால் இன்று விடுமுறை இல்லாமல் வேலை பார்க்க உத்தரவு. 
           மத்திய அரசு ஊழியர்களுக்கான அறிவிக்கபட்ட விடுமுறை தினமான குருநானக் பிறந்த தினத்தில் நமது CPMG அவர்கள் அதிரடியாக வேலை பார்க்க உத்தரவிட்டுள்ளார்.  
              ஏற்கனவே ஊழியர்கள் ஞாயிறு வேலை பார்த்து விட்டு களைப்பில் உள்ளனர். தொழிலாளர் நலன்களை மறந்து நமது இலாகா முதல்வர் செயல்படுவது கண்டனத்துக்குரியது. நமது முறையான கண்டனத்தை தமிழ்மாநில CPMG அவர்களிடம் பதிவு செய்து இருக்கிறோம். 
              ஒரு மனிதனுக்கு 8 மணிநேர பணி,ஒய்வு, உறக்கம் என்ற நிலை CBS ஆரம்பித்த அன்றே நமது இலாகாவில் ஒய்வு முடிவுக்கு வந்தது.
ஆனால் இன்று அதையும் மீறி இன்று விடுமுறை தினம் கூட வேலை பார்க்க நிர்பந்திக்கும் நிலை. 
நாம் என்ன மனிதர்களா ? 365 x 24 மணிநேரம் உழைக்க
நாம் என்ன இயந்திரங்களா ?
              இதை உடனடியாக அகில இந்திய செயலாளரும் சம்மேளன தலைவரும் தடுத்து நிறுத்திட முன் வரவேண்டும். 
ஞாயிறு விடுமுறையும் நம்மிடம் பறிபோகும் முன் உடனடியாக விழித்து கொள்ள வேண்டும். 
தொழிலாளர் நல சட்டங்கள் வழங்கிய வாய்ப்பு ஒவ்வொன்றாக பறிபோகும் நிலையில் நாம் இனிமேலாவது விழித்து போராட முன் வர வேண்டும் 
 இழந்தது போதும் !  இனி இழப்பதற்கு எதுவுமில்லை.
 P. திருஞான சம்பந்தம் 
மாநில தலைவர் 
இடைக்கால குழு 

No comments:

Post a Comment