Tuesday, 10 January 2017

" விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு"

               மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

             மத்திய அரசு ஊழியர்களுக்காக கட்டாய விடுமுறை பட்டியலிலிருந்து பொங்கல் நீக்கப்பட்டதாக,கடந்தாண்டு ஜூன் மாதம் மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பு நேற்று வெளிச்சத்திற்கு வந்தது.ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில்,பொங்கல் பண்டிகையும் கட்டாய விடுமுறை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதை அறிந்து தமிழகம் முழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்தன.


            மத்திய அரசின் முடிவுக்கு தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பையடுத்து,மத்திய அரசின் கட்டாய விடுமுறைப் பட்டியலில் பொங்கல் சேர்க்கப்படும் எனவும் தசரா பண்டிகை விடுமுறைக்கு பதிலாக பொங்கல் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment